தமிழகம், புதுச்சேரியின் ஒரு சில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, 13 நவம்பர் (ஹி.ச) தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில பகுதிகளில் இன்று (நவ 13) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நேற்று (நவ 12) காலை வரையிலான, 2
தமிழகம், புதுச்சேரியின் ஒரு சில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்


சென்னை, 13 நவம்பர் (ஹி.ச)

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில பகுதிகளில் இன்று (நவ 13) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

நேற்று (நவ 12) காலை வரையிலான, 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் அதிகபட்சமாக, 13 செ.மீ., மழை பெய்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதிகளில் தலா, 6; மதுரை மாவட்டம் எழுமலையில், 5; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது.

தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தமிழகம், புதுச்சேரியில் இன்று (நவ 13) முதல், நாளை மறுநாள் வரை, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 17 வாக்கில் மீண்டும் கன மழை துவங்க வாய்ப்புள்ளது.

17-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 18-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் பெரும்பாலான இடங்களில், இன்றும் நாளையும் அதிகபட்சமாக மணிக்கு, 55 கி.மீ., வரையிலான வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். மீனவர்கள், இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b