Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 13 நவம்பர் (ஹி.ச.)
கோவை பிரஸ் கிளப்பில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் வரும் 19-ம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் இயற்கை விவசாயம் குறித்து தீர்மானங்களை பிரதமர் மோடியிடம் வழங்க இருப்பதாக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர் பாண்டியன்:-
வருகின்ற நவம்பர் 19,20,21 ஆகிய மூன்று நாட்களில் கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் மாநாடு நடைபெற உள்ளது.இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.இந்த 50 வேளாண் விஞ்ஞானிகளுடன் தனி அரங்கில் கலந்துரையாடல் செய்கிறார்.
மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டில் தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா,ஆந்திரா, தெலுங்கானா,பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 5000-க்கும் மேற்பட்ட விவசாயிகளில் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் மண் மலட்டுத்தன்மை குறித்தும்,மண்ணில் அதிகளவில் நச்சுத்தன்மை உள்ளதாக உணவுப் பொருட்கள் பாதிப்படைந்து வருவதாகவும்,இயற்கை விவசாயம் குறித்தும் மண் வளத்தை மேம்படுத்த இந்த மாநாடு நடைபெற உள்ளதாகவும் இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பிரதமர் மோடியிடம் தீர்மானங்களை வழங்க இருப்பதாக கூறினார்.
பிரதமர் மோடி இந்த மாநாட்டில் கலந்து கொள்வதால் உலகம் முழுவதும் இயற்கை விவசாயம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதே போல் மத்திய,மாநில அரசுகள் விவசாய இயற்கை விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்க இந்த மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் வெறும் பத்து சதவீதம் மட்டும் தான் இயற்கை விவசாயம் செய்யப்பட்டு வருவதாகவும் கடைகளில் ஆர்கானிக் பொருட்களை இயற்கை விவசாயம் என்று கூறி விற்பனை செய்து வருகிறார்கள் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லை எனவும் இந்த மாநாடு மூலம் பொதுமக்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் எனவும் கூறினார்.
நச்சுத்தன்மை மற்றும் கெமிக்கல் பயன்படுத்தி விவசாயம் செய்வதினால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அதிகரித்து வருவதாகவும் அதனை முற்றிலும் தடுத்து இனி வருங்காலங்களில் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / V.srini Vasan