Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 13 நவம்பர் (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டிணத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு போத்தனூர் வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
சபரிமலை சீசனையொட்டி வருகிற 14, 21, 28 மற்றும் அடுத்த மாதம் (டிசம்பர்) 26, அடுத்த ஆண்டு (2026) ஜனவரி 2 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மசூலிப்பட்டிணத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் மசூலிப்பட்டிணம்-கொல்லம் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07101) மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லம் ரெயில்நிலையத்தை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் வருகிற 16, 23, 30 மற்றும் டிசம்பர் 28, ஜனவரி 4 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் கொல்லத்தில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் கொல்லம்--மசூலிப்பட்டிணம் வாராந்திர சிறப்பு ரெயில் (எண்: 07102) மறுநாள் காலை 8 மணிக்கு மசூலிப்பட்டிணம் ரெயில்நிலையத்தை சென்றடையும்.
இந்த ரெயிலானது காயன்குளம், செங்கணூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b