ஒரு பவுன் நகைக்காக மூதாட்டி கொலை - தொழிலாளி கைது!
கோவை, 13 நவம்பர் (ஹி.ச.) கோவை, கருமத்தம்பட்டி அருகே ஒரு பவுன் நகைக்காக மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளியே போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த வளைய பாளையத்தை சேர்ந்தவர் அருக்காணி அம்
Tension near Karumathampatti: Elderly woman murdered for one sovereign of jewelry – laborer arrested.


Tension near Karumathampatti: Elderly woman murdered for one sovereign of jewelry – laborer arrested.


Tension near Karumathampatti: Elderly woman murdered for one sovereign of jewelry – laborer arrested.


Tension near Karumathampatti: Elderly woman murdered for one sovereign of jewelry – laborer arrested.


கோவை, 13 நவம்பர் (ஹி.ச.)

கோவை, கருமத்தம்பட்டி அருகே ஒரு பவுன் நகைக்காக மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக தொழிலாளியே போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த வளைய பாளையத்தை சேர்ந்தவர் அருக்காணி அம்மாள். இவரது கணவர் கருப்பசாமி இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

அவர்கள் கிட்டாம்பாளையம், கணபதி பாளையம் பகுதிகளில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

கருப்புசாமி இறந்த நிலையில் வளையப்பாளையத்தில் உள்ள வீட்டில் அருக்காணி அம்மாள் தனியாக வசித்து வந்தார்.

நேற்று காலையில் அருக்காணி அம்மாளுக்கு அவரது மகள் சாந்தாமணி சாப்பாடு கொண்டு சென்றார். அப்பொழுது அவர் கட்டிலில் இறந்த நிலையில் கிடந்து உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் உறவினர்களும் அங்கு திரண்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்பொழுது மூதாட்டி கையில் அணிந்து இருந்த ஒரு பவுன் மோதிரம் காணாமல் போனதும் அவர் கழுத்தை நிறுத்தி கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.

இதை அடுத்து அந்த பகுதியில் மனைவியை இழந்து மகளுடன் வசித்து வரும் தொழிலாளி கோபாலன் என்பவர் மீது சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அருக்காணி அம்மாளை அனுப்பி கொலை செய்துவிட்டு அவரது கையில் அணிந்து இருந்த ஒரு பவுன் தங்க மோதிரத்தை திருடியது ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து தங்க மோதிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கோபாலனை கைது செய்தனர்.

கோவையில் ஒரு பவுன் நகைக்காக மூதாட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / V.srini Vasan