Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 13 நவம்பர் (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஷீத். இவரது மகன் சபிக் அகமது கோவை வட்டமலைபாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரியில் BE-CSE முதலாம் ஆண்டு படித்து வருகின்றார்.
இவர் கடந்த 4 ம் தேதி மதியம் கல்லூரி விடுதி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மாணவரின் தந்தை அப்துல் ரஷீத்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
துடியலூர் காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவன் தற்கொலை செய்து கொண்ட விதம் சந்தேகத்தை எழுப்புவதாகவும் சிறிய சேரில் இருந்து தூக்கு போட வாய்ப்பு இல்லை எனவும் கூறி மாணவனின் தந்தை மற்றும் அவருடன் வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து,5 ம் தேதி உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்ட மாணவரின் உடலை பெற்றுக்கொண்டு சொந்த ஊர் சென்றனர்.
கல்லூரி நிர்வாகம் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர்.
இந்நிலையில் புகார் அளித்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் துடியலூர் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இன்று மீண்டும் மாணவனின் தந்தை கோவை துடியலூர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார்.
இந்நிலையில் கல்லூரி நிர்வாகத்தின் துறை ரீதியான நடவடிக்கைக்கு பயந்து தான் தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாகவும் எனவே கல்லூரி நிர்வாகம் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து நீதி கிடைக்க செய்ய வேண்டும் என மீண்டும்ஒ மாணவரின் தந்தை அப்துல் ரஷீத் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர் பேட்டி அளித்த அப்துல் ரஷீது,
மாணவர் இறப்பு குறித்துகல்லூரி நிர்வாகம் தரப்பில் இருந்து முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை என்று கூறினார்.
தனது மகன் தற்கொலை செய்து கொண்டதற்கு கல்லூரி ஆசிரியர் ஒருவர் அழுத்தம் கொடுத்து இருப்பதே காரணம் எனவும், கடிதமும் எழுதி வாங்கி இருப்பதாகவும் இதில் மனமுடைந்த நிலையில் இருந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து கல்லூரிக்கு ஒரு நாள் செல்லாமல் சபீக் அகமது இருந்து இருப்பதாகவும் , இதையும் கல்லூரி நிர்வாகம் தங்களிடம் சொல்லவில்லை எனவும் இந்த மரணத்திற்கு நீதி வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இது போன்ற நிலை வேறு எந்த மாணவருக்கும் வரக் கூடாது எனவும் படிக்க வேண்டும் என தொடர் அழுத்தம் கல்லூரி தரப்பில் தொடர் அழுத்தம் கொடுத்ததே மரணத்திற்கு காரணம் எனவும் அப்துல் ரசீது தெரிவித்தார்.
இதுபோன்ற பெரிய கல்லூரிகளில் குழந்தையை சேர்க்க வேண்டுமென்று நினைத்து, யாரும் குழந்தைகளின் வாழ்க்கையை பாழடித்து விட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
காவல்துறையினர் முன்பு சரியாக விசாரிக்கவில்லை , நாங்கள் அழுத்தம் தர தரத்தான் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சரியாக தேர்வு எழுதவில்லை என கூறி வகுப்பறைக்கு வெளியில் நிறுத்தியதால், மனம் உடைந்து இதுபோல செய்து இருக்கலாம் எனவும் தெரிகிறது எனவும் தெரிவித்தார். கல்லூரி நிர்வாகமும் விடுதி வார்டனும் மாறி மாறி கைகாட்டி கொண்டு இருக்கின்றனர் எனவும், சி.சி.டி.வி கேமரா இல்லை எனவும், ஏற்கனவே பொருத்தப்பட்ட கேமரா கட்டப்பட்டது போல இருப்பதாகவும் இதையும் போலீஸ் விசாரணையில் சொல்லி இருப்பதாகவும் தெரிவித்தார்.
துடியலூர் காவல் துறையினர் ராமகிருஷ்ணா கல்லூரி நிர்வாகத்தை அழைத்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்ட பொழுது, துடியலூர் போலீசார் மாணவர் தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும்,போலீஸ் விசாரணைக்கு நிர்வாகம் தரப்பில் முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / V.srini Vasan