நவம்பர் 16 ஆம் தேதி SIR க்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்
சென்னை, 13 நவம்பர் (ஹி.ச.) தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வருகிற நவம்பர் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை SIR க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து SIR க்கு எதிராக ஆர்ப்பாட்டத
Tvk


சென்னை, 13 நவம்பர் (ஹி.ச.)

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வருகிற நவம்பர் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை SIR க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து SIR க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் எனவும் மக்களுக்கு இதன் மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்து தெளிவு படுத்த வேண்டும் எனவும் கட்சி சார்பில் அறிவுறுத்தப்பட உள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது கட்சி தலைவர் ஓரிரு நாட்களில் அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.

அதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்று காவல்துறையில் அனுமதி கடிதம் கொடுக்க உள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ