கோவையில் 64-வது தேசிய மருந்தியல் வார தொடக்க விழா !
கோவை, 15 நவம்பர் (ஹி.ச.) இந்திய மருந்தியல் சங்கம் (IPA) - தமிழ்நாடு மாநில கிளை, தமிழ்நாடு மருந்தியல் நல அறக்கட்டளை, சென்னை மற்றும் கோயம்புத்தூர் கிளை ஆகியவை இணைந்து 64-வது தேசிய மருந்தியல் வாரத்தை கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரிய
64th National Pharmacy Week Inaugural Function 2025 in Coimbatore.


கோவை, 15 நவம்பர் (ஹி.ச.)

இந்திய மருந்தியல் சங்கம் (IPA) - தமிழ்நாடு மாநில கிளை, தமிழ்நாடு மருந்தியல் நல அறக்கட்டளை, சென்னை மற்றும் கோயம்புத்தூர் கிளை ஆகியவை இணைந்து 64-வது தேசிய மருந்தியல் வாரத்தை கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியில் நடைபெற்றது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள திருமதி வேலுமணியம்மாள் அரங்கில் தொடங்கி வைத்தனர்.

J. ஜெயசீலன், ஐபிஏ-தமிழ்நாடு தலைவர் வரவேற்புரை வழங்கினார்.

சுந்தர் ராமகிருஷ்ணன், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் விழாவிற்கு தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு மருந்தியல் நல அறக்கட்டளையின் தலைவரும், ஃபோர்ட்ஸ் இந்தியா லேபரட்டரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான முனைவர் எஸ்.வி.வீரமணி கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி, முதல்வர் முனைவர் S. ஸ்ரீராம், 64-வது தேசிய மருந்தாளுநர் வாரத்தின் கருப்பொருளை Pharmacists as Advocates of Vaccination பற்றி உரையாற்றினார்.

ஐபிஏ-கோயம்புத்தூர் கிளையின் தலைவர் முனைவர் எம்.ராமநாதன், முனைவர் டி.கே.ரவியின் மரபு குறித்து ஒரு சுருக்கமான சொற்பொழிவை வழங்கினார்.

முனைவர் B. சுரேஷ், துணைவேந்தர் ஜே.எஸ்.எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முனைவர் டி.கே.ரவி அவர்களின் நினைவு சொற்பொழிவை வழங்கினார்.

லால்சந்த் பீம்ராஜ் நிதியுதவி அளித்த சிறந்த மருந்தாளுநர் விருதை இந்திய மருந்தியல் கல்லூரிகள் சங்கத்தின் (ஐஏசிபி) தலைவர் பேராசிரியர் K. சின்னசாமி அறிவித்தார்.

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மருந்தகத் தொழிலின் பல துறைகளில் சிறந்து விளங்குவதை அங்கீகரிக்கும் பல்வேறு ஐபிஏ விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த மருந்தாளுநர், தொழில்துறை சிறந்து, கல்வி சிறப்பு, ஒழுங்குமுறை சிறப்பு, சமூக மருந்தகத்தில் சிறந்து விளங்குதல், மருத்துவமனை மருந்தகம், கல்வி நிர்வாகம் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றுக்கான விருதுகள் இதில் அடங்கும்.

தமிழ்நாடு மருந்தியல் அறிவியல் நல அறக்கட்டளை மூலம் கட்டுரைப் போட்டி, பி.பார்ம் பிரிவில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு எம்.பார்ம் மற்றும் பார்ம் டி-ஆய்வுக் கட்டுரை பரிசுகள் மற்றும் கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டன,

ராஜேஷ் எச். பண்டாரி, செயலாளர், ஐபிஏ-தமிழ்நாடு, நன்றியுரை வழங்கினார்.

என் நிகழ்விற்கு கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 700 பேர் பங்கேற்றனர்.

Hindusthan Samachar / V.srini Vasan