Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 15 நவம்பர் (ஹி.ச.)
கோவை அரசு மருத்துவமனையில் வெறிநாய் கடி சிகிச்சை பிரிவு உள்ளது. இங்கு நாய் கடியால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈரோட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரமேஷ் ( வயது 23) என்பவர் வெறி நாய் கடித்ததால் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ராபீஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் நேற்று இரவு சிகிச்சை பலனில்லாமல் இறந்து விட்டார்.
அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Hindusthan Samachar / V.srini Vasan