Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 15 நவம்பர் (ஹி.ச.)
கோவை, பேரூர் அருகே இராமசெட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆந்திராவைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி இருந்து உள்ளார்.
அந்தக் காப்பகத்தை திருநெல்வேலியைச் சேர்ந்த அவரது சித்தி நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்த குழந்தையை அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாக கூறப்படுகிறது.
இதனால அந்த சிறுமி அந்தக் காப்பகத்தில் இருந்து தப்பிச் அருகே உள்ள பைபாஸ் சாலையில் காட்டுப்பகுதியில் தனியாக நின்று இருந்தார்.
இதனை அந்த வழியாக சென்ற நபர்கள் பார்த்து அந்த குழந்தையின் மீட்டு குழந்தையின் பெற்றோர் யார் என தெரியாத நிலையில் அந்தக் குழந்தையை பேரூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல்துறை விசாரணையில் அந்தக் குழந்தையை அவரது சித்தி நடத்தி வரும் காப்பகத்தில் அடித்ததால் தப்பி ஓடியதாக தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து அந்த குழந்தையை தற்பொழுது அவரது உறவினருடன் காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / V.srini Vasan