Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 நவம்பர் (ஹி.ச.)
காபி, டீக்கடைகளில் தற்போது குளிர்காலத்தையொட்டி கூட்டம் அலைமோதுகிறது. ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமான வகையில் லைட், ஸ்ட்ராங் டீ, காபி வேண்டுமென கேட்கின்றனர். ஆனாலும் அவர்கள் விரும்பியது போல சில நேரங்களில் டீ காபி கிடைப்பதில்லை.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது காபி தயாரிக்க ரோபோ வந்து விட்டது.
விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினினீயரிங் கல்லூரியில் கண்காட்சி நடந்தது.
அதில் ரோபோடிக் கபே அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு ரோபோ மூலம் காபி தயார் செய்யப்பட்டு வழங்கினர்.
அங்கிருந்த ஒரு ரோபோ 40 வினாடிகளில் 4 வகையான டீ, காபிகளை தயார் செய்து கொடுத்து அசத்தியது. ரோபோ அளித்த காபி மிகவும் ருசியாக இருப்பதாக தெரிவித்தனர்.
கடைகளில் இனி மாஸ்டர்கள் தேவையில்லை. இந்த ரோபோ எங்கள் விருப்பப்படி 4 வகையான காபியைத் தயாரித்து வழங்கும் என்று ஏற்பாட்டாளர்கள் விளக்கினர்.
விமான நிலையங்கள், ஐடி, பூங்காக்கள், மால்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் வெறும் 100 சதுர அடி பரப்பளவில் இந்த ரோபோ ஸ்டால்களை அமைக்கலாம்.
40 வினாடிகளில் விரும்பிய காபியைத் தயாரித்து வழங்குவதற்காக இது ஒரு ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டது.
Hindusthan Samachar / JANAKI RAM