Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 நவம்பர் (ஹி.ச)
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் புனித தெரேசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ–மாணவிகளுக்கு மிதி வண்டிகளை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
மேலும் மாணவிகள் சார்பில் மேளதாளத்துடன் வருகை புரிந்த அனைவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது,
தாம்பரம் மாநகராட்சியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் படிக்கும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கும் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் மொத்தம் 9 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் மிதிவண்டிகளை மாணவர்களிடம் வழங்கப்பட்டது.
மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி தி. சினேகா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ கருணாநிதி, திரு அரவிந்த் ரமேஷ், தாம்பரம் மாநகராட்சி மேயர் திருமதி. வசந்தகுமாரி கமலக்கண்ணன், தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் திரு காமராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி திரு வளர்ச்செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுந்தர், மற்றும் தலைமை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சமூக நலத்துறையினர், கல்வித்துறை அலுவலர்கள், உள்ளூர் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரும் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.
மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் தூரம், போக்குவரத்து சிரமம் போன்றவை காரணமாக கல்வியில் இடையூறு ஏற்படாத வகையில் இந்த மிதிவண்டி திட்டம் அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந் நிகழ்வில் தாம்பரம் மாநகராட்சி மேயர், துணை மேயர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி, மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
Hindusthan Samachar / P YUVARAJ