Enter your Email Address to subscribe to our newsletters

காஷ்மீர், 15 நவம்பர் (ஹி.ச.)
ஸ்ரீநகர் நகரில் உள்ள நௌகாம் காவல் நிலையத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
கிடைத்த தகவலின்படி,
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தற் செயலானது ஆகும்.
இது அதிகாரிகள் இடிபாடுகளை சோதனை செய்து கொண்டிருந்த போது நிகழ்ந்தது.
என்று கூறப்படுகிறது.
அதிகாரிகளால் பரிசோதிக்கப்படும் வெடிபொருட்கள் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட 360 கிலோ சந்தேகத்திற்கிடமான பொருட்களில் ஒரு பகுதியாகும் என்று கூறப்படுகிறது.
முக்கியமாக அம்மோனியம் நைட்ரேட்டைக் கொண்டிருந்த பொருட்கள், தடயவியல் (FSL) குழு மாதிரிகளை சேகரிக்கும் போது வெடித்ததாக கூறப்படுகிறது.
கையாளுதல் பிழையின் போதும்,மாதிரி எடுக்கும் போது ஏற்பட்ட கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதியில் நிலைமை
வெடிப்புக்குப் பிறகு நிலையத்திற்கு அருகிலுள்ள கட்டிடங்கள் மற்றும் வாகனங்களும் சேதமடைந்தன.
இந்த சம்பவத்தையடுத்து தீயணைப்பு படை வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் தடயவியல் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
விபத்து எப்படி நடந்தது, பாதுகாப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பதை அவர்கள் விசாரித்து வருகின்றனர்.
இத்தகைய பெரிய வெடி பொருட்களை சேமித்து ஆய்வு செய்வதற்கு இன்னும் கடுமையான நடை முறைகள் தேவையா என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இந்த சம்பவத்தல் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை எழுப்புகிறது.
வெடிப்பின் சத்தம் 5-10 கி.மீ தூரத்திற்கு கேட்டதாகவும் குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.
Hindusthan Samachar / Durai.J