Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 15 நவம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், மீண்டும் அதேபோன்ற மிரட்டல் 9 - வது முறையாக வந்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. காவல் துறையினர் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
மோப்ப நாய்கள் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற படையினர் ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அலுவலகத்தின் பிரதான கட்டடங்கள், வாகன நிறுத்தும் இடங்கள், பதிவறைகள், கூட்டரங்குகள், பின்புற வளாகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
இது கடந்த இரண்டு மாதங்களில் 9 வது முறையாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து உள்ள வெடிகுண்டு மிரட்டல் ஆகும்.
மேலும், கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், விமான நிலையம், நீதிமன்றம் இதைத்தொடர்ந்து நேற்று டவுன்ஹால் பகுதியில் உள்ள மணிக்கூண்டு இதேபோன்ற மிரட்டல் வந்து உள்ளதால், மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / V.srini Vasan