Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 15 நவம்பர் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டத்தில், வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் சினேகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள சோழிங்கநல்லுார் , பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 2,826 ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களால், வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று, கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்ப பெறும் பணியும் நடந்து வருகிறது. வாக்காளர்கள், 2002 - 2005ம் ஆண்டுகளின் முந்தைய தீவிர திருத்தத்தில் விபரங்கள் மற்றும் உறவினர்களின் விபரங்கள், சம்பந்தப்பட்ட சட்டசபை தொகுதியின் பாகம் எண், வரிசை எண் உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்ய (https;//erolls.tn.gov.in/ electoralsearch/ என்ற இணையதளத்தில் தகவல் அறிந்து கொள்ளலாம் அல்லது ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களிடம் கேட்டறிந்து கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
மேற்படி விபரங்களை வாக்காளர்கள் https;//voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில், தாங்களாகவே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இப்பணிகள், வரும் டிச., 4ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b