Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 15 நவம்பர் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று மாலை நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையானது பெய்த நிலையில், இந்த மழையின் காரணமாக தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் சற்று தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீரானது சீராக கொட்டி வரும் நிலையில், சீராக கொட்டி வரும் தண்ணீரில் ஆனந்த குளியல் போடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் குவிந்து வருகின்றனர்.
குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட 4 அருவிகளில் தற்போது குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், நான்கு அருவிகளிலும் தண்ணீரானது சீராக கொட்டி வருவதால் சீராக கொட்டி வரும் தண்ணீரில் ஆனந்த குளியல் போட்டு விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN