இயக்குனர் வி.சேகர் மறைவு - இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் இரங்கல்!
சென்னை, 15 நவம்பர் (ஹி.ச) இயக்குனர் வி.சேகர் மறைவிற்கு தமிழ் திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்தர் அறிக்கை வெளியிட்டு இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்
Tr


சென்னை, 15 நவம்பர் (ஹி.ச)

இயக்குனர் வி.சேகர் மறைவிற்கு தமிழ் திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்தர் அறிக்கை வெளியிட்டு இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

என் நீண்ட நாள் நண்பரும், இயக்குனருமான வீ.சேகர், குடும்பப் பாங்கான படங்களை எடுத்து, தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர்.

விரலுக்கு ஏத்த வீக்கம், காலம் மாறிப்போச்சு, வரவு எட்டணா செலவு பத்தணா, பார்வதி என்னை பாரடி, பொங்கலோ பொங்கல் என்று பல படங்களை எடுத்தவர், இன்று நம் கண்களை எல்லாம் கண்ணீரிலே பொங்க வைத்துவிட்டு, கண்களை மூடிவிட்டார் என்ற செய்தி, என் மனதை வாட்டுகின்றது.

அவரை இழந்து வாடும் திரை உலகத்தினருக்கும், அவர் இல்லத்தாருக்கும் என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ