Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 15 நவம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு தீவிர திருத்தம்-2026 ஆனது 1-1-2026-ஐ தகுதி நாளாக கொண்டு நடைபெற்று வருகிறது.
இதில் முதற்கட்டமாக வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யும் பணி கடந்த 4 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம், இன்று
(நவ 15) மற்றும் நாளை
(நவ 16) காலை, 9:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த முகாம் நடைபெறும் மையங்களான பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விகாஸா பள்ளிகளில், பல்வேறு துறைகளின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் தன்னார்வலர்களாக ஈடுபட்டுள்ளனர்.இணைய வழியாகவும், வாக்காளர்கள் தங்களது கணக்கெடுப்பு படிவங்களை பதிவேற்றும் வசதி குறித்தும் வாக்காளர்களுக்கு முகாமில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த எஸ்ஐஆர் சிறப்பு முகாம்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இன்று (நவ 15) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b