Enter your Email Address to subscribe to our newsletters

தர்மபுரி, 15 நவம்பர் (ஹி.ச.)
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 68 பஞ்சாயத்துகள் , 4 பேரூராட்சிகளில், நவ., 18, 19, 20 ஆகிய மூன்று நாள் பராமரிப்பு பணிகளுக்காக, குடிநீர் வினியோகம் நிறுத்தப்பபடவுள்ளது.
இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, 10 பஞ்சாயத்துகள் , காரிமங்கலம், 26, பாலக்கோடு, 32 பஞ்சாயத்துகள் , மற்றும் பாலக்கோடு, பாப்பாரபட்டி, காரிமங்கலம், மாரண்டஹள்ளி ஆகிய பேரூராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் மாதாந்திர பராமரிப்பு பணி நவ., 18 அன்று மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மின்வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலக்கோடு, மூங்கில்பட்டியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியின் பழுதுபட்ட வால்வுகளை நீக்கி புதிய வால்வுகளை பொருத்தும் பணி மேற்கொள்ள இருப்பதால், நவ., 18, 19, 20 ஆகிய மூன்று நாள் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.
மேற்கண்ட பகுதியினர் இம்மூன்று நாள் உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்திக்கொள்ளவும். மேலும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b