Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 15 நவம்பர் (ஹி.ச.)
அதானி நிறுவனத்துடன் பீகார் அரசு போட்ட மின்சார ஒப்பந்தத்தில் ரூ.62,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் பாஜகவில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மூத்த அரசியல் பிரமுகரும் இருமுறை எம்பியும் ஆன ஆர்.கே. சிங்குடன் சட்டமேலவை உறுப்பினர் அசோக் அகர்வால், கதிஹார் மேயர் உஷா அகர்வால் ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, கட்சி தலைமை அவர்களுக்கு நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பி இருக்கிறது. அதில் ஏன் உங்களை கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்று கேட்டுள்ளது.
இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் ஆர்.கே. சிங் அரா தொகுதியின் முன்னாள் எம்பி. ஆவார்.
முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் உள்துறை செயலாளராக பணியாற்றியவர்.
முதல் முறை மோடி பிரதமரான போது மத்திய அமைச்சராகவும் திறம்பட செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b