Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 நவம்பர் (ஹி.ச.)
சென்னை ஐகோர்ட்டில், தனியார் பேருந்து ஆபரேட்டர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “டீசல் விலை உயர்ந்துள்ளது. இலவச பஸ் பாஸ் திட்டம் போன்ற பல்வேறு காரணங்களால் தனியார் பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தவேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மனு கொடுத்தோம்.
இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில்,
கட்டணம் உயர்வு தொடர்பாக 950 கோரிக்கை மனுக்கள் அரசுக்கு வந்துள்ளது. ஆனால், அது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால், கடந்த 7-ந்தேதி அதிகாரிகள் கொண்ட கமிட்டி கூட்டம் நடந்தது. அதனடிப்படையில் டிசம்பர் 30-ந்தேதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும்.
என்று கூறப்பட்டது.
இதை பதிவு செய்துக்கொண்ட நீதிபதி,
டிசம்பர் 30-ந்தேதிக்குள் கட்டணத்தை உயர்த்துவது குறித்து முடிவு எடுத்து, அது குறித்த அறிக்கையை வருகிற ஜனவரி 5-ந்தேதி அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / JANAKI RAM