Enter your Email Address to subscribe to our newsletters

ஸ்ரீநகர், 15 நவம்பர் (ஹி.ச.)
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்த தாக்குதல் தொடர்பாக பரிதாபாத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 360 கிலோ வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த முகமில் ஷகீல் கனியா என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் விசாரணைக்காக ஜம்மு காஷ்மீரின் நவ்காம் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில் வெடிபொருட்களை ஆய்வு செய்துக் கொண்டிருந்தபோது திடீரென அந்த வெடிபொருட்கள் வெடித்ததால் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் 27க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் நடந்தது தற்செயலான வெடி விபத்துதான் என்று ஜம்மு காஷ்மீர் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் டிஜிபி நலின் பிரபாத் கூறுகையில்,
ஜம்மு காஷ்மீர் நவ்காம் போலீஸ் நிலையத்தில் நடந்தது தற்செயலான வெடி விபத்துதான்.
இதில் தேவையற்ற சந்தேகங்களுக்கு இடமில்லை. இந்த துயரமான நேரத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுடன் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை என்று உடன் இருக்கும்.
என்று கூறினார்.
ஏற்கனவே பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தநிலையில், மீண்டும் வெடிபொருள் வெடித்து 9 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM