Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 15 நவம்பர் (ஹி.ச.)
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது,
1966-ம் ஆண்டு பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தோற்றுவிக்கப்பட்ட தினமான நவம்பர் 16 தேசிய பத்திரிகையாளர்கள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு ஆண்டு தோறும் தேசிய பத்திரிகையாளர் தினமாகவும் கொண்டாடப்படுகின்றன.
நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் செய்தியை சேகரிக்க தனது உயிரை பணிய வைத்து இரவும் பகலும் பார்க்காமல் சமூக அக்கறையோடு தொடர்ந்து உழைத்து வரும் பத்திரிக்கையாளர்கள் மீது பொய் வழக்குகள், மற்றும் தாக்குதல், கொலை மிரட்டல் படுகொலைகளைகள் போன்ற சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமாக உள்ளன.
ஆகவே எந்தவித அச்சம் இன்றி பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக செயல் பட நடவடிக்கை எடுப்பதுடன் பத்திரிக்கையாளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டு கொள்கிறோம்.
எனவே, உண்மையை நிலைநாட்டி தேசத்தை பாதுகாக்க அயராமல் உழைத்து கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்கள் அணைவருக்கும் தேசிய பத்திரிக்கையாளர்கள் தின நல் வாழ்த்துக்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN