Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 15 நவம்பர் (ஹி.ச.)
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மாவட்ட, ஒன்றிய அமைப்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் ஆகியோருக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
இதில், திமுக முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு,
பீகார் தேர்தலில் ஒவைசி கட்சியால் ஜெயிக்க முடியாது என பலர் கூறினர். ஆனால், அவர்கள் அங்கு வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெறுவார்கள் என நினைத்தவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
இதற்கு காரணம் ஒவைசியின் பேச்சு.
எனவே, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பேச்சுகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். மக்கள் பணி ஆற்றக்கூடிய இடத்தில் நாம் உள்ளோம். மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. எனவே, அதில் நாம் துளி அளவு கூட ஏமாந்து விடக்கூடாது.
வாக்காளர் பட்டியல் சீரமைப்பு பணியை நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், இந்த வாய்ப்பை விட்டு விடாமல் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது தேர்தல் பணிக்காக பிரத்யோக வார் ரூம் திறக்கப்பட்டுள்ளது. இதில், ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், அணி செயலாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நூறு ஓட்டுகள் குறித்த பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.
நாளை முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை தான் ஓட்டுக்களை சேர்க்க முடியும். அதன் பிறகு, ஓட்டுகளை சேர்க்க முடியாது. பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க இயலாது. எனவே, இருக்கும் 30 நாட்களில் யாருக்கு ஓட்டு உள்ளது? யாருக்கு இல்லை? என்பதனை கண்டறிய வேண்டும்.
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டுமென்றால், டெல்டா மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.
இது முக்கியமான காலகட்டம். மற்ற கட்சிகளின் பார்வை எல்லாம் வேறு இடங்களில் உள்ளது.
எனவே, இதனை நல்ல முறையில் நாம் பயன்படுத்தி வெற்றி காண வேண்டும்.
இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN