Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 நவம்பர் (ஹி.ச)
தமிழக பாஜக மாநில அலுவலகமான கமலாலயத்தில், பழங்குடியின மக்களின் தலைவராக போற்றப்படும் பிர்சா முண்டா அவர்களின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் இனிப்புகள் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயண திருப்பதி,
பிர்சா முண்டாவின் வரலாற்று பங்களிப்பை நினைவுகூர்ந்தார். 1865 நவம்பரில் பிறந்த அவர், நிலம், வளம், கலாச்சாரம் மற்றும் தேசத்தை காப்பாற்ற போராடிய முதல் பழங்குடி சுதந்திரப் போராளி என்பதை வலியுறுத்தினார்.
மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக 24 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும், வீடு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சென்று சேர்க்க முக்கிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாநில அரசு உரியவர்களிடம் சேர்ப்பதில் அலட்சியம் காட்டுகிறது என்று அவர் கடும் குற்றச்சாட்டு முன்வைத்தார்.
கே என் நேரு – திருமாவளவன் கருத்து விவகாரம் குறித்த கேள்விக்கு,
44 லட்சம் ரூபாய் திருப்பதியில் அன்னதானமாக வழங்கிய கே. நேரு குறித்து எழுந்த விவாதத்தையும் அவர் பதிலளித்தார்.
அது தவறு அல்ல,ஆனால் இந்து சமயம் குறித்தும், கோவில்களை அவதூறு செய்வதற்கு அமைதியாக இருந்ததே கே. நேருவின் தவறு என அவர் கூறினார்.
திருமாவளவன் போன்றவர்கள் கோவில்களை அவமானப்படுத்தும் வகையில் பேசிய போதும், கே. நேரு மௌனம் காத்தார் என்றும் அவர் விமர்சித்தார்.
202 இடங்களில் NDA வெற்றியை கண்டு முக ஸ்டாலின் தலைச்சுற்றல்.
தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் பெற்ற வெற்றி, ஸ்டாலின் தலைமையிலான திமுகக்கு அதிர்ச்சியளித்துள்ளது என்று நாராயண திருப்பதி தெரிவித்தார்.
பிஹாரில் NDA வெற்றிக்கு அமித்ஷா மற்றும் நரேந்திர மோடி ஆகியோரின் கவனமான திட்டமிடலே காரணம் என்றும், இப்போது அவர்களின் கவனம் தமிழகத்தை நோக்கி திரும்பி இருப்பதே ஆளும் கட்சிக்கு பதட்டம் ஏற்படுத்துகிறது என்று கூறினார்.
SIR (Standardised Integrated Register) திட்டத்தில் எவ்வித குழப்பமும் இல்லை.
பிஹாரில் SIR Part-1 மிகச் சிறப்பாக நடைமுறைக்கு வந்துள்ளது.
எந்த முறைகேடும், குழப்பமும் இல்லை என்றார்.
தமிழகத்தில் திட்டமிட்டு எதிர்ப்பும், தவறான விளக்கமும் அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
ராகுல் காந்தியின் தேர்தல் கருத்து குறித்து பேசும்போது,
ராகுல் காந்தி இந்தியாவில் இருக்கிறாரா, வெளிநாட்டில் இருக்கிறாரா? யாருக்கும் தெரியாது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
முழுமையான பிரச்சாரமே NDA-க்கு ஆதரவாக மாறியது என்றும் அவர் தெரிவித்தார்.
நூறு நாட்களாக போராடிவரும் தூய்மை பணியாளர்களுக்கு திடீரென உணவு வழங்கும் திட்டம் அறிவித்தது குறித்து,
பல அடித்தடி பிரச்சனைகளுக்குப் பிறகு நாடகம் ஆடுகிறார் முதலமைச்சர்”
அவர்களின் பிரச்சனையை தீர்க்காத அரசு தற்காலிக அம்சமாக திட்ட அறிவிப்பை பயன்படுத்துகிறது என தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ