Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 15 நவம்பர் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்டம் அதிமுக கழகம் சார்பில் வாக்குசாவடி நிலை முகவர்கள் BLA 2 பயிற்சி முகாம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது,
பீகாரில் NDA கூட்டணி மிகப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள்- நாட்டுக்கும் ஊருக்கும காங்கிரஸ் கட்சி ஆகாது. காங்கிரஸ் கட்சி நாட்டை காட்டிக் கொடுக்கிறது. தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது.
மேலும் வீணாப்போன காங்கிரஸை திமுக தான் தூக்கி பிடித்திருக்கிறார்கள் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை கழட்டி விட்டால் காங்கிரஸ் காணாமல் போய்விடும்.
பீகார் தேர்தல் முடிவுதான் தமிழகத்தில் நிலவும். 220க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக கூட்டணி வென்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அமர்வார் நமது வெற்றி தூரத்தில் இல்லை. மிக அருகில் உள்ளது.
திமுகவை தோல்வி முகத்தோடு கோட்டையை விட்டு வெளியேறும் காலம் வந்து விட்டது. அதிமுக வெற்றி முகத்தோடு கோட்டையை நோக்கி செல்லும் காலம் வந்து கொண்டிருக்கிறது. உங்களது உழைப்பை வீணாக்க மாட்டேன்.
இராஜபாளையம் தொகுதி நமது அடையாளம் அதிமுக இரட்டை இலை தான் இராஜபாளையத்தில் போட்டியிடும். எனக்கு சிவகாசி ஒரு கண் என்றால் இராஜபாளையம்
மற்றொரு கண்.
இராஜபாளையம் தொகுதியில் வெற்றியை விட்டாலும் மக்கள் மனதில் நாம் இருக்கின்றோம். கூட்டணிக்கு என்று பல தொகுதிகள் உள்ளது. மாவட்டத்தில் 7 தொகுதியிலும் அதிமுக கூட்டணிதான் வெற்றி பெறும்.
திமுக விளம்பரம் தான் செய்கிறது. விளம்பத்தால் உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது. ஒலிம்பிக் ஜோதியை பிடித்து ஓடுகின்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு நாம் பக்க பலமாக இருக்க வேண்டும்.
அதிமுக பாஜக கூட்டணி வலுவலான கூட்டணி - திமுக கூட்டணி குழப்பமான கூட்டணி - திமுக கூட்டணியில் உள்ள 10 கட்சியும் பல கருத்துக்கள் கொண்டவை. ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள்.
எடப்பாடியார் ஏழைகளை, உழைப்பாளிகளை நேசித்தார்.
அவரை நாம் தூக்கி நிறுத்த வேண்டும் என சிறப்புரையாற்றினார்.
Hindusthan Samachar / ANANDHAN