Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 15 நவம்பர் (ஹி.ச.)
மதுரை மாவட்டத்தில் வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து வழங்குவதனை எளிமைப்படுத்தும் வகையில் எதிர் வரும் 15.11.2025 (சனிக்கிழமை) மற்றும் 16.11.2025 (ஞாயிறுக்கிழமை) ஆகிய இரண்டு தினங்கள் (SIR) உதவி மையம் செயல்படவுள்ளது.
மேற்படி உதவி மையத்தில் அந்தந்த வாக்குச்சாவடிகளிலேயே வாக்காளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 2752 வாக்குச்சாவடி மையங்களிலும், உதவி மையம் செயல்படும் நாட்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் திறந்துள்ளதா என்பதை உறுதி செய்தும், வாக்குச் சாவடி மையங்களில் பணிபுரியும் தேர்தல் பணியாளர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை (குடிநீர், கழிப்பிட வசதி) செய்து தரவேண்டும்.
மேலும், வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெற்று உடன் கணிணி பதிவேற்றம் மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN