Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 15 நவம்பர் (ஹி.ச)
தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய கடலோரப் பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது, இதனால் அந்த பகுதியில் இருந்து வரும் உப்பளங்கள் பாதிக்கப்படும் சூழல் இருப்பதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முள்ளக்காடு, பழையகாயல் வரை உள்ள உப்பள தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி உப்பள தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் தலைமையில் உப்பு உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேகர், மற்றும் நிர்வாகிகள் சேலம், எடப்பாடி நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
இந்த பிரச்சனையில் கவனம் செலுத்தி பார்த்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் போது நிர்வாகிகள் மந்திரமூர்த்தி பொன்ராஜ்,சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், சிவாகர், கணேஷ்நகர் சுயம்பு நாடார், பாலசுப்பிரமணியன், ஈபால், பொன்ராம், பிரபாகர், பாரத், ராமர் மற்றும் தொழிற்சங்கத்தினர், அதிமுக செயலாளர் சுடலைமணி உட்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b