Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 நவம்பர் (ஹி.ச.)
பீகார் தேர்தல் வெற்றிக்காக நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழசை செளந்ததரராஜன் அதனை விமர்சித்து அதிரடி பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், பீகாரில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வெற்றி பெற்றவர்களை வாழ்த்துவதில் கூட, ஏன் திறந்த மனதுடன் இல்லாமல் குறுகிய மனநிலையில் உள்ளீர்கள்? 2024இல் திமுக கூட்டணி 40க்கு 40 இல் வெற்றி பெற்றது.
அப்போதெல்லாம் உங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதோ, தேர்தல் ஆணையத்தின் மீதோ சந்தேகம் எழவில்லை.
ஆனால், மத்தியில் மோடியும், மாநிலத்தில் நிதிஷ்குமாரும் அயராமல் உழைத்து இந்த வெற்றியை பெற்றுள்ளனர்.
இப்போது உங்களுக்கு தேர்தல் ஆணையம் மீது சந்தேகம் வருகிறது. 'இந்தியா' கூட்டணியில் போட்டியிட்ட யாரும் மறுவாக்குப் பதிவு கேட்கவில்லை.
தவறவிட்ட வாக்குகளைக் கோரி, மக்களும் போராட்டத்தில் ஈடுபடவில்லை.
இதனை நினைவில் வைத்து கொண்டு பேசுங்கள்.
உங்கள் நிலைப்பாட்டுக்கு எதிராக இருந்தாலும், மக்களின் தீர்ப்பை மதிப்பது அவசியம் என விமர்சித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN