Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 15 நவம்பர் (ஹி.ச)
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மினி விளையாட்டு மைதானங்கள் உருவாக்க அரசு திட்டமிட்டு, அதற்கான பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம் மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட கிருஷ்ணா நகரில் ஆறரை ஏக்கரில் 2 கோடி 50 லட்ச ரூபாய் மதிப்பில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர கீதா ஜீவன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்
இந்த மினி ஸ்டேடியத்தில் ஓடுதளம், அலுவலகம், கேலரி, வாகனங்கள் நிறுத்தும் வசதி, கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கோ-கோ, கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கான ஆடுகளங்கள், கழிவறை வசதிகள் என, விளையாட்டு வீரர்களுக்காக ப ல வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.
இதில் கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹீமன்சூ மங்கள், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், ஸ்டீபன் ரத்தினகுமார், முன்னாள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் , திமுக ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், ஜெய கண்ணன், கோவில்பட்டி நகர பொறுப்பாளர் (கிழக்கு) சுரேஷ் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் முன்னாள் அறங்காவலர் தலைவர் குழு தலைவர் ராஜகுரு, முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திருப்பதி ராஜா, சண்முகராஜா, ரவீந்திரன், திமுக நிர்வாகி ரமேஷ், பீட்டர், கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி மேலாளர் அந்தோனி அதிர்ஷ்ட ராஜ் இனாம் மணியாச்சி ஊராட்சி செயலாளர் சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கோவில்பட்டி அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு சீர்திருத்த முகாமையும் அமைச்சர் கீதா ஜீவன் பார்வையிட்டார்.
முன்னதாக கோவில்பட்டி பங்களா தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி புதிய கட்டிடத்தையும் அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ