Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 நவம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் குடும்பங்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கான பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த பண்டிகை சீசனில் ரயில் டிக்கெட் தேவை அதிகரிப்பதால், இந்திய ரயில்வே 60 நாட்கள் முன்பு முன்பதிவு வசதி வழங்குகிறது. இது பயணிகளுக்கு கன்பார்ம் டிக்கெட் பெற உதவுகிறது மற்றும் கடைசி நிமிட அவசரத்தை தவிர்க்கிறது. அதன்படி பொங்கல் பண்டிகைக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.
ஜன.14ம் தேதிக்கான முன்பதிவு இன்று (நவ 15) காலை தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்திருக்கிறது.
சென்னை எழும்பூரிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (12633) அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20635) குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127) தாம்பரம்-நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் (22657) என அனைத்து ரயில்களும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.
அதேபோல தென்மாவட்டங்களுக்கு செல்லும் மற்ற ரயில்களை பொறுத்தவரை, திருநெல்வேலி வந்தேபாரத் (20665) நெல்லை சூப்பர் பாஸ்ட் (12631) எழும்பூர்-திருநெல்வேலி சூப்பர் பாஸ்ட் (20605) ரயில்களிலும் டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீர்ந்திருக்கின்றன.
சென்னை எழும்பூர் தொடங்கி மதுரை வரை செல்லும் மற்ற ரயில்களை பொறுத்தவரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் (22671) குயின்லேண்ட் எக்ஸ்பிரஸ் (16101) பொதிகை எக்ஸ்பிரஸ் (12661) முத்துநகர் எக்ஸ்பிரஸ் (12693) வைகை எக்ஸ்பிரஸ் (12635) பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12637) இது தவிர வெளி மாநிலங்களிலிருந்து வந்து எழும்பூர் வழியாக தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் ரயில்களிலும் டிக்கெட்டுகள் காலியாகி விட்டன.
Hindusthan Samachar / vidya.b