எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் கூட்டணிக்கு அமமுக செல்ல வாய்ப்பில்லை - டிடிவி தினகரன்
சென்னை, 15 நவம்பர் (ஹி.ச) அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் சென்னை அடையாறில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக டி டி வி தினகரன் செய்தியாளர்களை சந
Ttv


சென்னை, 15 நவம்பர் (ஹி.ச)

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் சென்னை அடையாறில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக டி டி வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசியவர்,

தலைமை கழக நிர்வாகிகள் மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. பீகார் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில் எதிரொலிக்குமா என்ற கேள்விக்கு,

பீகார் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில் எதிரொலிக்கும் என்று நம்பவில்லை.

தேர்தல் ஆணையம் எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டில் நடப்பது திமுக ஆட்சி தான் SIR தமிழ்நாட்டை சேர்ந்த அதிகாரிகள் தான் நடத்துகிறார்கள்.

எல்லாரும் கட்சியினரும் சேர்ந்து சரியாக முறையாக நடத்த வேண்டும்.

செங்கோட்டையன் ஓபிஎஸ் டிடிவி தினகரன் அடுத்த கட்ட செயல்பாடு குறித்த கேள்விக்கு,

தொலைபேசி வாயிலாக அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். அது முடிவுக்கு வந்தபின் தெரிந்து கொள்வீர்கள். பழனிச்சாமி முதலமைச்சராக ஏற்றுக் கொள்ள முடியாது என்ற காரணத்திற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கினோம் அவர் தலைமையை ஏற்று சேர முடியாது. நாங்கள் சேரவே விரும்பவில்லை.

கூட்டணி பற்றி பேச்சு நடந்து வருகிறது டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் முடிவுக்கு வந்து விடும்.

டிடிவி தினகரன் தான் தமிழக வெற்றி கழக கூட்டணிக்கு முயற்சி செய்து வருகிறார் என்று பேசி வருகிறார்கள். நாங்கள் எந்த முடிவு எடுக்கவில்லை.

சில கட்சிகள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று எங்களுடன் பேசிக் கொண்டிருப்பது உண்மை, எந்த கட்சியையும் நான் தேடி பேசவில்லை அதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு அவசியமும் இல்லை,

எங்களுடன் எந்த கட்சி பேசிக் கொண்டிருக்கிறது என்று இந்த நேரத்தில் சொல்வது நாகரீகமாக இருக்காது கூட்டணி முடிவுக்கு வந்த பின்பு சொன்னால் தான் சரியாக இருக்கும். எந்த முடிவு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை கலந்து பேசி தான் முடிவு எடுப்போம்.

2016 தேர்தல் வேறு 2026 தேர்தல் வேறு.

இதில் ஆளுங்கட்சி கூட்டணிக்கும் தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்கும் தான் கடுமையான போட்டி இருக்கும் என்று நினைக்கிறேன்.

நான் அந்த கூட்டணிக்கு செல்வதற்காகவோ கூட்டணி சமிக்கை பேசவில்லை. ஊடக தகவல்கள் சர்வே தகவல்கள் உள்ளிட்டவற்றை வைத்து நடுநிலையாக சொல்கிறேன், இது எதார்த்தம்.

எங்களை பொருத்தவரை துரோகத்தை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.

2021 தேர்தலில் சில முக்கியமான நபர்கள் கேட்டுக் கொண்டதற்காக கூட்டணி அமைவது என்று தெரிந்தும் அவர்கள் மீது உள்ள மரியாதையில் வயதில் பெரியவர்கள் என்பதற்காக சம்மதித்தேன்.

பழனிசாமி எங்களுக்கு துரோகம் செய்துள்ளார். என்னை சந்திக்க எடப்பாடி பழனிசாமிக்கு தயக்கம் உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைந்து போட்டியிட வாய்ப்பே இல்லை என என் டி ஏ கூட்டணி முக்கிய தலைவர்கள் தான் சொல்லியிருக்கிறேன்.

டெல்லியை சேர்ந்தவர்கள் அழைத்ததன் பேரில் சென்றேன் அப்போது 40 தொகுதிகள் கொடுத்தால் கூட்டணியில் வருகிறோம் நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்று சொன்னேன், சொல்லிவிட்டு ஏன் செல்லவில்லை என்பது கிடையாது. என்னை சந்திப்பதற்கும் ஏற்றுக் கொள்வதற்குள் பழனிச்சாமிக்கு தயக்கம் உள்ளது எங்களுக்கு துரோகம் செய்துள்ளதால், கேட்டவர்கள் வயதை காரணம் கொண்டு பேசினோம் நாங்கள் தனியாக தான் போட்டியிட்டோம் வெற்றி பெற முடியவில்லை.

யார் ஆட்சிக்கு வர கூடாது எந்த துரோகம் வெற்றி பெறக்கூடாது என்று நினைக்கிறோமோ அது நடந்தது தமிழ்நாடு அரசியலில் துரோகம் யாரும் நினைத்து பார்க்க கூடாது என்பதற்காகத்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இந்த தேர்தலை சந்திக்கிறது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தவிர்த்துவிட்டு எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது. மக்கள் என்ன முடிவு செய்கிறார்களோ அதுதான்.

உதயநிதி புதிய கட்சிகளுக்கு வரலாறு என்று பேசியது குறித்த கேள்விக்கு,

1949 ஆம் ஆண்டில் திமுகவுக்கு என்ன வரலாறு இருந்தது அண்ணா அப்போது கட்சி தொடங்கியதால் இப்போது வசதியாக பேசுகிறார்கள். இப்படி பேசுவதால் ஏதோ அவர்களுக்கு உறுத்தல் இருப்பதாக தெரிகிறது. அண்ணாமலையுடன் நட்பு ரீதியாக பேசி வருகிறோம் நயினார் நாகேந்திரன் உடன் தொடர்பில்லை யாருடன் பேச்சு வார்த்தை இல்லை.

புரட்சித்தலைவர் ஆரம்பித்த கட்சியாக இல்லாமல் அடிப்படை விதிகளை தகர்த்தெறிந்து விட்டு EDMK வாக செயல்பட்டு வருகிறது அதனால் தான் தொடர்ந்து இரட்டை இலை சின்னம் இருந்தும், பணபலம் இருந்தும், கூட்டணி பலம் இருந்தும் ஆட்சிக்கு வர முடியாமல் போனது என்று சொன்னால் அங்குள்ள தம்பிகளுக்கு கோபம் வருகிறது உண்மையை அவர்கள் உணரவில்லை இந்த தேர்தலுக்கு பிறகு உண்மையை உணர்வார்கள் மீண்டும் புரட்சித்தலைவர் தொடங்கிய அதே சட்ட திட்டங்களோடு மறுமலர்ச்சி பெற வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்.

SIR முறையாக செயல்படுத்தப்படுவதில்லை என்று கட்சிகள் குற்றம் சாட்டுவது குறித்து கேள்விக்கு,

திமுக தேர்தல் ஆணையம் இதை சரியாக செய்யவில்லை என்று சொல்கிறார்கள். கட்சிகளும் ஒவ்வொரு பூத்துக்கும் வரும் பொழுது அங்குள்ள நிர்வாகிகள் அதை கண்காணிக்கும் பொழுது எந்த தவறும் நடக்க வாய்ப்பில்லை. இறந்தவர்கள் வாக்கு, இரண்டு வாக்குகள் நீக்க வாய்ப்பிருப்பதாக தான் நான் கருதுகிறேன். தேர்தல் ஆணையம் கொடுக்கும் படிவத்தை பூர்த்தி செய்ய ஏழை எளிய மக்களுக்கு கிராமப்புற மக்களுக்கு சிரமமாக இருக்கும் அதற்கு மற்ற கட்சியினர் உதவ வேண்டும்.

திமுக நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார்கள் அந்த தீர்ப்பு என்னவென்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பாஜகவுடன் கூட்டணி வைத்தபின் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பிக் பாஸ் சொல்வதை கேட்கிறார் என்று முதல்வர் பேசியது குறித்த கேள்விக்கு,

1999 ஆம் ஆண்டு ஸ்டாலின் தந்தையார் கூட்டணி வைத்து அமைச்சரவையில் இடம்பெற்றார் டெல்லி பிக் பாஸ் சொன்னதை தான் அவர் அப்பா கேட்டுக் கொண்டிருந்தாரா என்று தெரியவில்லை அந்த அனுபவத்தில் கூட அவர் சொல்லலாம்.

பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி பி துரைசாமி பிரிந்தவர்கள் ஒன்றை இவர்கள் என்று பேசியது குறித்த கேள்விக்கு,

பிரிந்தவர்கள் என்று யாரை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று இயக்கம் தொடங்கி 8 ஆண்டுகள் ஆகிறது பழனிச்சாமி துரோகம் செய்ததை அடுத்த தொடங்கி இருக்கிறோம் துரைசாமி அவர்கள் சொல்வதன் அடிப்படை என்னவென்று தெரியவில்லை.

சில மத்திய அமைச்சர்கள் என்னுடன் நட்பு ரீதியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணி குறித்து பேசினால் என்னால் ஒப்புக்கொள்ள முடியாது என்பது அவர்களுக்கு தெரியும்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் கூட்டணிக்கு அமமுக செல்ல வாய்ப்பில்லை.

அனைத்து தொகுதி வாரியாக அனைத்து நிலை நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், பேரூராட்சி நிர்வாகிகள், நகராட்சி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் அனைத்து நிர்வாகிகள் அந்தந்த தொகுதிகளில் உள்ள அனைத்து பூதிகளிலும் தேர்தலுக்கு தயார் படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

Hindusthan Samachar / P YUVARAJ