சாமானிய, நடுத்தரக் குடும்பங்களுக்குள் நிலவும் பிரச்னைகளையும், தீர்வுகளையும் திரையில் சொன்னவர் வி.சேகர் - தவெக அருண்ராஜ் இரங்கல்
சென்னை, 15 நவம்பர் (ஹி.ச.) பொறந்த வீடா புகுந்த வீடா, விரலுக்கேத்த வீக்கம் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் வி.சேகர் நேற்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது மறைவிற்கு தவெக கொ
Arunraj


Tweet


சென்னை, 15 நவம்பர் (ஹி.ச.)

பொறந்த வீடா புகுந்த வீடா, விரலுக்கேத்த வீக்கம் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் வி.சேகர் நேற்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரது மறைவிற்கு தவெக கொள்கை பரப்பு பொது செயலாளர் அருண்ராஜ் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

பெரியார், அம்பேத்கர், காரல் மார்கஸ் போன்ற தலைவர்களை தனது திரைப்படங்களில் தவறாமல் காண்பித்து அவர்களது கொள்கைகளை மக்களிடம் தன் கலைப்படைப்புகள் மூலம் எளிமையாக கொண்டு சென்ற ஐயா வி.சேகர் அவர்களது இறப்பு திரைத்துறைக்கு மட்டுமல்ல, ஜனரஞ்சக திரைப்படங்களை விரும்பும் பொது மக்களுக்கும் மாபெரும் இழப்பு.

சாமானிய, நடுத்தரக் குடும்பங்களுக்குள் நிலவும் பிரச்னைகளையும் அதற்கான தீர்வுகளையும் திரையில் சொன்ன இயக்குநர் வி.சேகர் அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ