வாக்காளர் தீவிர திருத்தத்தை (SIR) எதிர்த்து தமிழக வெற்றி கழகம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது
சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.) வாக்காளர் தீவிர திருத்தத்தை (SIR) எதிர்த்து தமிழக வெற்றி கழகம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் சிவானந்த சாலையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய தமிழக வெற்றி கழகத்தின்
தாவக


சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.)

வாக்காளர் தீவிர திருத்தத்தை (SIR) எதிர்த்து தமிழக வெற்றி கழகம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய போராட்டம்

இன்று நடைபெற்று வருகிறது.

இதில் சென்னையில் சிவானந்த சாலையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கலந்து கொண்டார்.

அப்போது பேசிய வார்த்தை தெரிவித்ததாவது,

பொதுக்குழு முடிஞ்ச உடனே கடந்த ஒரு வாரமாக கதறிட்டு இருக்காங்க திமுக.

ஆதவ் அர்ஜூனா அப்படி பேசிட்டார் இப்படி பேசிட்டார்னு.

இதில் பெரிய பெரிய மீடியா youtube எல்லாம் விலைக்கு வாங்கிட்டு இருக்காங்க.

தலைவர் அவர்களை பற்றி திட்டினா மிகப்பெரிய பணம் கிடைக்கும் என்று ஒரு வியாபாரத்தை உருவாக்கி இருக்காங்க இதற்கு நாம் அவங்களுக்கு நன்றி செலுத்துகிறோம்.

இனிமே சென்னையில் அடிக்கடி ஒரு கூட்டம் போட வேண்டுமென்று பொதுச்செயலாளர் அண்ணன் அவர்களிடம் கூறினேன்.

இந்த ஒரு வாரம் என்னவெல்லாம் பேசினார்களோ அதற்கு நம்முடைய அக்காக்கள் வந்து பேசினார்களே பேச்சு திமுக பற்றி பேசியது உண்மைகளை பேசும் பொழுது அப்படித்தான் அதுதான் அவர்களுடைய பழக்கம்.

அம்மா ஜெயலலிதா அவர்கள் தனிப்பட்ட முறையில் ஒரு பெண் என்ற காரணத்திற்காக முதல்வர் ஆவதற்குள் ஜெயலலிதா அவர்களுடைய உடலை பற்றி மிக அசிங்கமாக பேசிய கட்சிதான் திமுக. அதனால் திமுக நம் மீது கூறுகின்ற அவதூறுகளுக்கு பதில் கூறுவதற்கு நமக்கு நேரமில்லை.

தலைவர் அடிக்கடி சொல்வது தான் நாம் நதி மாதிரி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் அதில் அசிங்கமும் வரும் நல்லதும் வரும் அதில் நாம் நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு செல்வோம் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தலைவர் அவர்களை முதலமைச்சராக வேண்டும் என்பதுதான் நம்முடைய குறிக்கோள் அந்த குறிக்கோளை மட்டும் நோக்கி நாம் செல்ல வேண்டும்.

நம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் மத்திய அரசு எதிர்த்தும் அதே போல தேர்தல் ஆணையத்தை எதிர்த்தும்.

இதில் தமிழக முதல்வருக்கு என்ன பிரச்சனை என தெரியவில்லை தமிழக வெற்றி கழகம் சார்பாக நடத்தப்படுகின்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற மேடைகளை சரி செய்ய வேண்டும் எனவும் அதேபோல பல்வேறு கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து மாறி மாறி கூறி வருகின்றனர்.

இதில் தமிழக முதல்வருக்கு பிரச்சனையா அல்லது அவருடைய மகன் உதயநிதிக்கு பிரச்சினையா என தெரியவில்லை

போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் சுற்றி சுற்றி அலைக்கழிக்கப்பட்டு கிட்டத்தட்ட எட்டு முதல் 10 கிலோமீட்டர் வரை நடந்து சென்று சுற்றி வந்திருக்கிறார்கள் எதற்கு எவ்வளவு அநியாயம்.

தமிழக சட்டப்பேரவை நடந்து கொண்டிருக்கும் பொழுது ஏன் எஸ் ஐ.ஆர்-க்கு எதிராக ஒரு தீர்மனாத்தை பேரவையில் கொண்டு வரவில்லை.

வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு நாம் தான் உச்சநீதி மன்றத்தில் தலைவரின் ஆணைக்கிணங்க வழக்கினை தொடர்ந்தும் அப்பொழுது நம்முடைய வழக்கறிஞர்கள் எந்த அளவிற்கு வாதாடினார்கள் என அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் .ஆனால் இவர்கள் எஸ் ஐ ஆர்கு எதிராக எந்தவித வாதங்களையும் முன் வைக்காமல் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் வெளியில் வந்து நாங்களும் வழக்க தொடர்ந்தோம் என வடிவேலு செய்யும் காமெடி போல செய்து கொண்டிருக்கின்றனர்.

அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு நடத்திருக்க வேண்டும் ஆனால் அப்படி நடத்தாமல் திமுகவுக்கு அழைத்திருந்தது.

தமிழக அரசு ஏன் எஸ் ஐ ஆர்க்கு எதிராக ஒரு அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தவில்லை .அதனால்தான் அடிக்கடி திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டணியென தலைவர் அடிக்கடி கூறுவார். தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய வேலையை நமது தலைவர் செய்திருக்கிறார் .

குறிப்பாக எஸ் ஐ ஆரை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் பொழுது அது என்ன என்ற தகவல்களை பொது மக்களுக்கு ஒரு சிறிய காணொளி மூலமாக தெளிவு படுத்தும் வகையில் கொடுத்திருக்க வேண்டும் ஆனால் அப்படி செய்யவில்லை.

இந்த வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் அடுத்து உங்களுடைய ஆதார் செல்லுபடி ஆகாது அதேபோல பாஸ்போர்ட் எடுக்க இயலாது செல்லுபடியாகாது என்ற நிலை வரலாம்.

எஸ் ஐ ஆரை நடைமுறைப்படுத்த வேண்டாம் என இங்கு யாரும் கூறவில்லை நடைமுறைப்படுத்தலாம் ஆனால் அது குறித்து ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே பொதுமக்களுக்கு வீடியோ மூலமாக விழிப்புணர்வும் ஏற்படுத்திவிட்டு அதன் பிறகு செய்திருக்கலாம் இதனை தேர்தல் ஆணையம் செய்திருக்க வேண்டும்.

ஆனால் அப்படியில்லாமல் நம்முடைய தலைவர் ஒரு காணொளியை வெளியிட்டார் அந்த காணொளி கிட்டத்தட்ட மூன்று கோடி மக்களிடையே சென்று சேர்ந்து இருக்கிறது இதிலிருந்தே மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் மக்களுக்காக யார் உண்மையாக குரல் கொடுக்கிறார்கள்.

இதிலிருந்தே மக்களுக்கு புரிந்து கொள்ள வேண்டும் மக்களிடம் ஓட்டு வாங்குவது மட்டும் எங்கள் வேலை அல்ல மக்களுக்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது தான் எங்களுடைய வேலை.

உண்மையான வெளிப்படையான ஒரு தேர்தல் நடந்தால் தமிழக வெற்றி கழகம் 1967 மற்றும் 1977 பிறகு நம்முடைய கட்சியின் தலைவர் அருதி பெரும்பான்மையாக வாக்குகளை பெற்று முதலமைச்சராவார் இது உறுதி இதில் எந்த விதமான சந்தேகமும் கிடையாது.

தமிழகத்தில் இருக்கின்ற வாக்காளர்களுடைய ஒரு வாக்கு பறிக்கப்பட்டாலும் உச்ச நீதிமன்றம் சென்று வாதாட கூடிய ஒரே தலைவர் நம்முடைய தலைவர்.

பிகாரில் நடைபெற்ற எஸ்ஐஆர் வேறு இங்கு தமிழகத்தில் வேறு. இங்கு திமுக மத்திய அரசை எதிர்ப்பது போல் எதிர்த்து கொண்டிருக்கிறார்கள் .

இன்று இந்த எஸ் ஐ ஆர் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள 68 ஆயிரம் நபர்கள் யார் யார் என அனைத்து தகவல்களும் திமுகவிடமுள்ளது.

இன்று திமுக நிர்வாகிகள் BLO-கலுடன் சேர்ந்து இங்கு தங்களுக்கு தேவையான பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட களத்தில் ஒன்று சேர வேண்டும்.

Bloக்களை பணி செய்ய விடாமல் அவர்களை ஓரிடத்தில் அமர சொல்லிவிட்டு திமுக நிர்வாகிகளே எல்லா வீடுகளுக்கும் செல்லக்கூடிய நிலைகளை பார்க்க முடிகிறது.

அனைத்து BLO-க்களும் மக்களை நேரில் சென்று பார்த்திருக்கிறார்கள் என்ற சோதனை தேர்தல் ஆணையம் சார்பாக செய்யப்படுகிறதா அப்படி கிடையாது மாறாக இங்கு மாநில அரசு என்ன தகவல்களை கொடுக்கிறது அதைத்தான் தேர்தல் ஆணையமும் நம்புகிறது.

முதல் வாக்காளர்களை குறிப்பாக 18 முதல் 20 வயது உடையவர்களின் வாக்குகள் பறிபோகாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

நம் தலைவர் கூறியது படி அவர்களுடைய வாக்குகள் மிக முக்கியமானவை அதனால் BLO-க்கள் இந்த பணிகளை முறையாக செய்கிறார்களா என்பதை நாம் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் மக்களிடம் நாம் தான் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் மக்களுடைய எழுச்சி பெண்களுடைய எழுச்சி இளைஞர்களின் எழுச்சி என அனைத்தும் நம்மிடம் தான் இருக்கிறது ஆனால் அவை அனைத்தும் வாக்குகளாக மாற வேண்டும் அதுதான் நம் முன் இருக்கக்கூடிய மிகப்பெரிய சவால்.

திமுகவிடம் சரியான கட்டமைப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள் எங்களிடம் கட்டமைப்பு இல்லை எனக் கூறுகிறீர்கள் எங்களுடைய கட்டமைப்பே மக்கள் தான்.

BLO-க்களை மாநில அரசும் மத்திய அரசும் கைக்குள் வைத்துக் கொண்டு எந்தெந்த வாக்காளர்களுக்கு இந்த படிவத்தை கொடுக்க வேண்டும் என முடிவு செய்து கொள்கிறார்கள்.

நம்முடைய கட்சி நிர்வாகிகள் அனைத்து வாக்காளர்களுக்கும் அனைத்து பொதுமக்களுக்கும் இந்த படிவம் சென்று இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்..

தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் நம்முடைய தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களிக்கிறார்களோ இல்லையோ ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் புதிய வாக்காளர்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை கிடைக்க வேண்டும் இதுதான் நம்முடைய தலைவரின் குறிக்கோள்.

நம்முடைய கழக நிர்வாகிகள் அனைவரும் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு இந்த படிவம் சென்று இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் மேலும் முதல் வாக்காளர்களுக்கும் இந்த படிவம் சென்று இருக்கிறதா? அவர்களுக்கு இது குறித்து தெரிந்திருக்கிறதா என்ற தகவல்களையும் உறுதிப்படுத்த வேண்டும் அப்படி உறுதிப்படுத்தும் பட்சத்தில் நம்முடைய கழகத்தின் தலைவர் முதலமைச்சராவதை யாராலும் தடுக்க முடியாது. இதை நாம் உறுதிப்படுத்துவோம்.

அவரை தொடர்ந்து பேசிய தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் N. ஆனந்த்

இன்று தவெக சார்பில் தமிழ்நாடு முழுக்க போராட்டம் நடக்கிறது. நாம் இப்படி போராடுவது சாதாரண விஷயத்துக்காக அல்ல. நாட்டையே உலுக்கும் விஷயத்துக்காக கூடியிருக்கிறோம். SIR என்பது என்ன? வாக்காளர் பெயர்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி கூட்டம் கூட்டமாக நீக்கப்படுவதாக மக்கள் கூறுகிறார்கள். இறந்துவிட்டதாக, வீடு மாறிவிட்டதாக கூறி பெயர்களை நீக்குவது அப்பட்டமான துஷ்பிரயோகம். அதேநேரம், போலி வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்படுவதாக தகவல் வருகிறது. இது எதை காட்டுகிறது. புறவாசல் வழியாக ஆட்சியாளர்கள் வெற்றி பெற பார்க்கிறார்கள்.

இது ஆளுங்கட்சிக்கு சாதகமான அரசியல் சூழ்ச்சி. சிந்தித்து பாருங்கள். தளபதி சொன்னது போல, குடிமகனின் உண்மையான உரிமை வாக்குரிமை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை யார் தீர்மானிக்க வேண்டும்? மக்கள்தான். ஆனால், இங்கே ஆளும்கட்சியினர்தான் தீர்மானிக்கின்றனர்.

இந்த நடவடிக்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும். அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்வதை கட்டாயமாக்க வேண்டும். BLOக்களை திமுக, பாஜக கட்சியினர் மிரட்டுவதை கைவிட வேண்டும்

தவெக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு, பிழையற்ற வாக்காளர் பட்டியல் வெளியாவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

இவற்றுக்கு செவி கொடுக்காவிட்டால் போராட்டம் ஓயாது. தொடரும். வாக்கு உங்களது உரிமை. சோதனைகளை தாண்டி வாக்குப்பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இவ்வளவு காலம் எங்களை ஏமாற்றியது போல இனி ஏமாற்ற முடியாது.

நாங்கள் தளபதியின் தொண்டர்கள். 2026இல் தளபதி ஆட்சி அமையும்.

நன்றி வணக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்

Hindusthan Samachar / Durai.J