Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 16 நவம்பர் (ஹி.ச.)
ஐநாவின் குழந்தைகள் நல நிதியம் ஆக செயல்பட்டுவரும் யுனிசெப் அமைப்பில் உலகின் 190 நாடுகளில் இணைந்துள்ளன.
மனிதாபிமான உதவி மற்றும் சுகாதார, ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு போன்ற உரிமைகளை குழந்தைகளுக்கு வழங்கவும், வலியுறுத்தவும் இந்த அமைப்பு பாடுபடுகிறது.
இதன் இந்திய பிரிவின் சார்பில், ஏற்கனவே சினிமா பிரபலங்கள் பலர் தூதர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். தற்போது, நடிகை கீர்த்தி சுரேஷ் தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிக்கைக்கான தேசிய விருது பெற்றவர்.
'யுனிசெப்' இந்தியா அமைப்பின் தூதராக நியமனம் செய்யப்பட்டது குறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில்,
குழந்தைகள் தான் நமது மிகப்பெரிய எதிர்க்கால நம்பிக்கை, அவர்கள் மீது அன்பு செலுத்தி சிறந்தவர்களாக உருவாக்குவதற்கு தேவையான அடித்தளத்தை மேம்படுத்த வேண்டியது நமது கடமை.
யுனிசெப் இந்தியா அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் பெருமை அடைகிறேன்.
என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b