தமிழ்நாட்டில் ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கு எதிராக ஊடகங்கள் கிளர்ந்து எழ வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.) தேசிய பத்திரிக்கை தினத்தையொட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்திய பிரஸ் கவுன்சில் தோற்றுவிக்கப்பட்ட நாளான நவம்பர
Anbumani


Tweet


சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.)

தேசிய பத்திரிக்கை தினத்தையொட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

இந்திய பிரஸ் கவுன்சில் தோற்றுவிக்கப்பட்ட நாளான நவம்பர் 16-ஆம் நாள் தேசிய பத்திரிகை நாளாக கடைபிடிக்கப்படுகிறது. ஊடகங்கள் தான் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற இங்கிலாந்தின் அரசியல் அறிஞராக திகழ்ந்த எட்மண்ட் பர்க்-கின் கூற்று இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் பொருந்தக் கூடியது தான். மூன்று தூண்களும் செயலிழக்கும் நிலையிலும் ஜனநாயகத்தை தாங்கிப் பிடிப்பது ஊடகங்கள் தான். அத்தகைய ஊடகங்களின் அங்கமாக திகழும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

தமிழ்நாட்டில் ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கு எதிராக ஊடகங்கள் கிளர்ந்து எழ வேண்டும்,

தமிழ்நாட்டில் சரியும் ஜனநாயகக் கட்டமைப்பை தாங்கிப் பிடித்துக் காக்க ஊடகங்களால் தான் முடியும்.

ஊடகங்கள் தங்களின் உன்னதக் கடமையை ஆற்ற வேண்டும் என்று வேண்டுகிறேன்.

என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ