Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 16 நவம்பர் (ஹி.ச.)
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஊடகத்துறை தேசிய ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் தலைமையில் கோவை பந்தய சாலையில் உள்ள சாரதாம்பாள் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் நீண்ட ஆயுள் பெற சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ஏழைப் பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / V.srini Vasan