Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 16 நவம்பர் (ஹி.ச.)
கேரளாவில் பிரசித்திப்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் நடை திறந்து பூஜைகள் மேற்கொள்ளப்படும்.
பிறகு கார்த்திகை மாதத்தில் சபரிமலை சீசன் தொடங்கும்.கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உள்பட பல மாநில பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைப்பிடித்து சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.
பொதுவாக கார்த்திகை மாதத்தில் வரும் மண்டலகால பூஜை அதன்பிறகு வரும் மகரவிளக்கு பூஜை நாளில் ஏராளமான ஐயப்ப சாமி பக்தர்கள் கோவிலுக்கு சென்று வருவார்கள்.
கார்த்திகை மாதம் பிறந்தால் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து சபரி மலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி நாளை(நவ 17) கார்த்திகை மாதம் தொடங்கவுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் ஐயப்ப மாலைகள், பூஜை பொருட்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சன்னதி வீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்களுக்காக, மாலைகள், காவி மற்றும் கருப்பு உள்ளிட்ட பல வண்ணங்களில் வேஷ்டிகள், பூஜை பொருட்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன.
பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்வது அதிகரித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b