பண்ணாரி மாரியம்மன் கோவிலில் 70 வயது பூர்த்தியான தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது
ஈரோடு, 16 நவம்பர் (ஹி.ச) தமிழகத்தில் 70 வயது பூர்த்தியடைந்த தம்பதிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு செய்யும் நிகழ்ச்சியை அண்மையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி தமிழக கோவில்களில் 70 வயது பூர்த்தியடைந்த
Bannari


ஈரோடு, 16 நவம்பர் (ஹி.ச)

தமிழகத்தில் 70 வயது பூர்த்தியடைந்த தம்பதிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு செய்யும் நிகழ்ச்சியை அண்மையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன்படி தமிழக கோவில்களில் 70 வயது பூர்த்தியடைந்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அவ்வகையில் ஈரோடு மாவட்டம் பண்ணாரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆன்மீக ஈடுபாடு உடைய, 70 வயது பூர்த்தி அடைந்த 14 தம்பதிகளுக்கு சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இன்று சிறப்பு செய்யப்பட்டது.

இந்த தம்பதிகளுக்கு கோவில் சார்பில் பூமாலைகள். மங்கள பொருட்கள் புடவை, வேஷ்டி, சட்டை போன்ற மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டன.

அதன் பிறகு பண்ணாரி மாரியம்மனுக்கு நடந்த சிறப்பு பூஜைகளில் அனைவரும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதில் தம்பதிகளின் உறவினர்கள், கோவில்

பரம்பரை அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Hindusthan Samachar / P YUVARAJ