Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 16 நவம்பர் (ஹி.ச.)
இந்தியாவில் உள்ள மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின்கீழ் (ஏஐசிடிஇ) இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர சிமேட் எனப்படும் பொது நிர்வாக நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுதோறும் இணையவழியில் நடத்தப்படுகிறது.
நடப்பாண்டுக்கான சிமேட் தேர்வு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளை (நவம்பர் 17) நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் https://cmat.nta.nic.in/ எனும் வலைதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் செலுத்த நாளை மறுநாள் (நவம்பர் 18) கடைசி நாளாகும்.
விண்ணப்பங்களில் நவம்பர் 20, 21ம் தேதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். தேர்வுக்கான பாடத்திட்டம் உட்பட கூடுதல் விவரங்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் இருந்து அறியலாம்.
ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது cmat@nta.ac.in மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b