Enter your Email Address to subscribe to our newsletters

ராய்ப்பூர், 16 நவம்பர் (ஹி.ச.)
2026 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியாவில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
சத்தீஷ்கார் மாநிலத்தில் அங்கு பஸ்தார் போன்ற பகுதிகள், நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் ஆகும். அம்மாநிலத்தில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பா.ஜனதா அரசு நடைபெற்று வருகிறது.
மேலும் அம்மாநிலத்தில், நக்சலைட்டுகளை சரண் அடையச்செய்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும்‘பூனா மார்கம்’ என்ற திட்டம் அமல்படுதப்பட்டு வருகிறது.
கடந்த அக்டோபரில் ஒரே நாளில் 210 நக்சலைட்டுகள், தங்களது ஆயுதங்களுடன் போலீஸ் மற்றும் துணை ராணுவப்படை அதிகாரிகள் முன்பு சரண் அடைந்தனர். நக்சல் ஒழிப்பு நடவடிக்கை வரலாற்றில் அதிகம்பேர் சரண் அடைந்த நிகழ்ச்சி இதுதான் என்று அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், சத்தீஷ்காரில் இதுவரை 2 ஆயிரம் நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரம் நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர்.
அவர்களுக்கு மறுவாழ்வுக்கான வேலை வாய்ப்பை வழங்கி அதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சியின்போது அவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மேம்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b