Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 16 நவம்பர் (ஹி.ச.)
நவ.10ம் தேதி டில்லி செங்கோட்டை அருகே லால் குயிலா மெட்ரோ ரயில் நிலையம் பகுதியில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் பலர் பலியாகினர்.
ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
தற்கொலைப் படையினரின் கார் குண்டுவெடிப்பை அடுத்து தலைநகர் டில்லியில் பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டது.
நகரின் பல்வேறு பகுதிகளிலும்,மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது.
இந் நிலையில், குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து மூடப்பட்ட டில்லி செங்கோட்டை வளாகம், மக்களின் பார்வைக்காக இன்று (நவ.16) முதல் மீண்டும் திறக்கப்படுவதாக தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அறிவித்து உள்ளது.
எப்போதும் போல் பார்வையாளர்கள் வரலாம் என்றும் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM