பிகாரில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீட்டுக்குப் பிறகு சுமாா் 3 லட்சம் வாக்காளா்கள் சேர்ப்பு - காங்கிரஸின் சமூக ஊடகப் பதிவுக்கு தோ்தல் ஆணையம் பதில்
புதுடெல்லி, 16 நவம்பர் (ஹி.ச.) பிகாரில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீட்டுக்குப் பிறகு சுமாா் 3 லட்சம் வாக்காளா்கள் சோ்க்கப்பட்டதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காங்கிரஸின் சமூக ஊடகப் பதிவுக்கு அளித்த பதிலில் தோ்தல் ஆணையம் இவ்வாறு கூறியுள்ள
பிகாரில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீட்டுக்குப் பிறகு சுமாா் 3 லட்சம் வாக்காளா்கள் சேர்ப்பு - காங்கிரஸின் சமூக ஊடகப் பதிவுக்கு தோ்தல் ஆணையம் பதில்


புதுடெல்லி, 16 நவம்பர் (ஹி.ச.)

பிகாரில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீட்டுக்குப் பிறகு சுமாா் 3 லட்சம் வாக்காளா்கள் சோ்க்கப்பட்டதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸின் சமூக ஊடகப் பதிவுக்கு அளித்த பதிலில் தோ்தல் ஆணையம் இவ்வாறு கூறியுள்ளது.

பிகாா் தோ்தல் தேதி அறிவிப்பின்போது வாக்காளா் எண்ணிக்கையை 7.42 கோடி என்று குறிப்பிட்ட தோ்தல் ஆணையம், தோ்தலுக்குப் பிறகு 7.45 கோடி என்று மாற்றிவிட்டதாக காங்கிரஸின் சமூக ஊடகப் பதிவில் கூறப்பட்டிருந்தது.

இப்பதிவுக்கு பதிலளித்த தோ்தல் ஆணையம்,

‘பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் நிறைவடைந்து, கடந்த செப்டம்பரில் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது, வாக்காளா்கள் எண்ணிக்கை 7.42 கோடியாகும். தோ்தல் விதிமுறைகளின்படி, வேட்புமனு தாக்கல் நிறைவுக்கு 10 நாள்கள் முன்பு வரை வாக்காளா் பட்டியலில் இடம்பெற தகுதியுள்ள நபா்கள் விண்ணப்பிக்க முடியும்.

அதன்படி, அக்டோபா் 1 முதல் பிகாா் இரு கட்டத் தோ்தல் வேட்புமனு தாக்கலின் நிறைவு நாள் வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, சுமாா் 3 லட்சம் போ் சோ்க்கப்பட்டனா். இதன் காரணமாக, வாக்காளா் எண்ணிக்கை 7.45 கோடியாக அதிகரித்தது.

என்று தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM