Enter your Email Address to subscribe to our newsletters

ஸ்ரீநகர், 16 நவம்பர் (ஹி.ச.)
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் பட்காம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அந்த காரில் 9 பேர் பயணித்தனர். பலார் என்ற பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வேகமாக வந்த லாரி,கார் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்த 5 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / JANAKI RAM