Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 16 நவம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் மதுக்கரை மரப்பாலம் அருகே அமைந்துள்ளபல நூற்றாண்டுகள் பழமையான தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் கடந்த பல ஆண்டுகளாக நடந்ததாக கூறப்படும் பெரிய அளவிலான பொருளாதார முறைகேடுகள்,ஆவண மோசடிகள் மற்றும் தன்னிச்சை நிர்வாகம் தொடர்பான புகார்களுக்கு, உயர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை உத்தரவு விசாரணை முடிவடைந்ததது.
கோவில் வாழ்நாள் அறங்காவலராக இருந்த கிருஷ்ணசாமி மற்றும் அரசு போக்குவரத்து துறையில் பஸ் ஓட்டுநராக பணிபுரிந்தும் துறை அனுமதி இன்றி அறங்காவலராக செயல்பட்ட திருமூர்த்தி உள்ளிட்ட பலர் மீது மோசடி,கணக்கு மறைவு,அனுமதி இல்லாத கட்டுமானம்,கோவில் நிலங்களை மறைத்து வைத்தல், நன்கொடை கணக்கில் காட்டாமை உள்ளிட்ட பல புகார்கள் எழுந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தொழிலதிபர் சி.கே கண்ணன் 2023-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர நீதிமன்றம் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் குழுவை நியமித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
அதிகாரிகள் குழுவின் விசாரணையில்,அனுமதி இன்றி அறங்காவலர்கள் நியமித்தல்,27 இளைப்பாறு மண்டபங்கள் கட்டப்பட்டும் எந்த வரவு-செலவு பதிவும் இல்லாததுகோவில் பெயரில் வங்கி கணக்கே இல்லாமல் நன்கொடைகள் மறைக்கப்பட்டு மோசடி நடந்ததுமதுக்கரையில் உள்ள ரூ.125 கோடி மதிப்பிலான 28.15 ஏக்கர் கோவில் நிலம் பதிவேடு இன்றி மறைக்கப்பட்டதுபவுர்ணமி,பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் இடைக்கால உண்டியல் வருவாய் கணக்கில் காட்டப்படாதது.தங்கம்,வெள்ளி காணிக்கை பொருட்கள் பதிவேடு செய்யப்படாதது உள்ளிட்ட 29 குற்றச்சாட்டுகளும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டன.
இதற்கிடையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே முறையான கணக்கெடுப்பின் மூலம் கோவிலுக்கு ரூ.70,45,370 வருவாய் வந்துள்ளது. தற்போது கோவில் பெயரில் ரூ.12 லட்சம் வங்கி டெபாசிட்டாகவும் உள்ளது.
அனைத்துப் புகார்களும் உண்மை என நிரூபணமாகியதை அடுத்து இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் ரமேஷ்,கிருஷ்ணசாமியை வாழ்நாள் அறங்காவலர் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் கடந்த 30 ஆண்டுகளில் கோவிலில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி பணத்தை மீட்டு கோவிலுக்கே ஒப்படைக்க வேண்டும் என்று சிவபக்தர்கள் தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / V.srini Vasan