Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 16 நவம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மீனவரணி சார்பில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு படகு போட்டி தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையிலிருந்து நடைபெற்றது.
இந்த போட்டியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி கீதா ஜீவன் கலந்து கொண்டு படகு போட்டியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட மீனோரணி அமைப்பாளர்
பி அந்தோணி ஸ்டாலின் முன்னிலை வைத்தார்.
படகு போட்டியில் 14 படகுகளுடன் மீனவர்கள் கலந்து கொண்டனர். முத்துநகர் கடற்கரையில் இருந்து கடலுக்குள் மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்று திரும்பி வரும் போட்டி நடைபெற்றது. இதில் ராஜ் முதலிடத்தையும் விஜய் இரண்டாவது இடத்திலும் ராஜேஷ் மூன்றாவது இடத்திலும் பிடித்தனர் இவர்களுக்கு பரிசுகள் வருகிற 21ஆம் தேதி நடைபெறும் உலக மீனவர் தின விழாவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் எஸ் ஆர் ஆனந்த சேகரன், மாநில மீனவர் அணி துணை செயலாளர் புளோரன்ஸ் கலைப் பிரிவு அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாநகர தொண்டர் அணி அமைப்பாளர் முருக இசக்கி, துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ் மாநகராட்சி, வடக்கு மண்டல தலைவர் நிர்மல் ராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெயசீலி, ரெசீலின், வைதேகி, விஜயலட்சுமி, நாட்டு படகு மீனவர் சங்க மாநில தலைவர் ரீகன் மாவட்ட மீனவர் அணி தலைவர் அந்தோனிராஜ் துணை அமைப்பாளர்கள் ராபர்ட், ஸ்மைலன். சேஷய்யா. ஜெனிபர். வட்டச் செயலாளர்கள் டென்சிங், அந்தோணிசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Hindusthan Samachar / vidya.b