Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.)
ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக இருக்கும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் என் இனிய தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துக்கள் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
உங்கள் குரல் எப்போதும் மக்களுக்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் நேர்மைக்காகவும் ஒலிக்கட்டும்.
அன்றாட நிகழ்வுகளை நேர்மையுடன் வெளிக்கொணரும் நிருபர்கள் தான் ஜனநாயகத்தின் உண்மையான காவலர்கள்.
உண்மை பேசும் தைரியமும், அதைக் காக்கும் உறுதியும் கொண்ட பத்திரிகையாளர்களுக்கு இன்றைய தினத்தில் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிப்போம்.
என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ