Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 16 நவம்பர் (ஹி.ச.)
தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு த.வெ.க மாநில கொள்கை பரப்பு செயலாளர் அருண் ராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது கண்டன உரையில் பேசிய த.வெ.க மாநில கொள்கை பரப்பு செயலாளர் அருண் ராஜ்,
தி.மு.க, தமிழக வெற்றி கழகம் என இருவரும் எஸ்.ஐ.ஆர் எதற்கு போராடுகிறார்கள்.
எஸ்.ஐ.ஆர்.ஐ பயன்படுத்தி தி.மு.க வினர் எந்த அளவிற்கு தமிழக வெற்றி கழகத்தினரின் வாக்குரிமையை பறிக்க முடியுமா ?அந்த அளவிற்கு பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சரி ஓட்டு கேட்க வீதிக்கு வர வேண்டும் ஒவ்வொரு வீடை தேடி வர வேண்டும் அல்லவா அப்போது கேள்வி கேட்போம் அல்லவா அது தான் அவர்களுக்கு பயம் கேள்வி கேட்டால் அவர்களுக்கு பதில் சொல்ல முடியாது அல்லவா அது தான் அவர்கள் பயம்.
இந்தியாவின் பெருமை என்ன உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா அது தான் இந்தியாவின் பெருமை
ஜனநாயகத்தின் ஆணிவேர் என்று எதை சொல்வோம் நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் அது தான் இந்த ஜனநாயகத்தின் ஆணிவேர் இதற்காகத் தான் நாம் நமது அரசியல் அமைப்பு சட்டம் வகுக்கப்பட்ட போது இதற்காக தனியாக சிறப்பாக ஒரு பிரிவு சேர்த்து இருக்கிறார்கள்.
யாராக இருந்தாலும் என்ன ஜாதியில் பிறந்து இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் சரி பணக்காரனாக இருந்தாலும் சரி, எந்த மதத்தை பின்பற்றினாலும் சரி, படித்தாலும் சரி, படித்தால் விட்டாலும் சரி அனைவரும் சமம் அது தான் கொள்கை தலைவர்களில் ஒருவரான அம்பேத்கர் வழங்கிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சாராம்சம்
அவர் ஏற்படுத்திய சட்டப்பிரிவு 126 இன் படி அனைவருக்கும் சம ஓட்டுரிமை இந்த அடிப்படை கோட்பாட்டத்தை சிதைக்கும் விதமாக எஸ்.ஐ.ஆர் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஜனநாயகத்திற்கு எதிராக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதத்தில் ஒரு அச்சுறுத்தல் வந்து கொண்டு இருந்தது
அதன் சமீபத்திய வடிவம் தான் இந்த எஸ்.ஐ.ஆர் போராட்டம் மற்றும் பேச்சுகள் உரிமைகளுக்கு பிறகு தான் இந்த ஓட்டுரிமை கொண்டு வந்தோம், கிடைத்ததுஆனால் நமக்கான இந்த வாக்குரிமை கொடுத்தது யாரு நம் இந்திய அரசியலமைப்பு சாசனம் இதை யாராலும் பறிக்க முடியாது எந்த சக்தியும், நானும் பறிக்க முடியாத. எஸ்.ஐ.ஆர் அவசியமா ? ரொம்ப ரொம்ப அவசியம், இதுதான் நம் தேர்தல் வாக்கு பட்டியலில் இருக்கின்றது. இவர்கள் தான் ஓட்டு போட முடியும் இவ்வளவு முக்கியமான அவசியமான விஷயத்தை ஏன் ? இவ்வளவு அவசரகதியில் பண்ணுகிறீர்கள் அதுதான் எங்களுடைய கேள்வி.
6.4 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள் பி.எல்.ஓ கள் 68,000 பேர் தான் இருக்கிறார்கள் 30 நாட்களில் எப்படி ? முடிக்க முடியும் என்ற நியாயமான சந்தேகம் அனைவருக்கும் இருக்கிறது.
கடந்த ஜனவரியில் தான் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டனர் அதன் பிறகு ஏன் ? இதை செய்கிறீர்கள.
ஜனநாயக நாடு என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவ்வளவு அவசர கதியில் வெளிப்படை தன்மை இல்லாமல் எஸ்.ஐ.ஆர் நடத்துகிறீர்கள், பீகாரில் நடத்தினீர்கள் இவ்வளவு ப்ரொசீஜர் சொல்லுகிறீர்கள்.
பிஹாரில் என்ன நடந்தது, ஒரே வீட்டில் 10 க்கும் மேற்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள் எத்தனை இடங்களில் இருக்கிறார்கள். அதெல்லாம் என்னானது நியாயமான கேள்வி உள்ளது, தேர்தல் ஆணையம் சரியான பதிலை சொல்லவில்லை
இதனால் தான் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கின்றது. இதன் உண்மையான நோக்கம் என்ன என்று இது தான் சாக்கு என்று தி.மு.க எதிர்ப்பது போல எதிர்த்து விட்டு உள்ளது.
தமிழக வெற்றிக்காக வாக்காளர்கள் ஆதரவாளர்கள் இருக்கிறார்களோ அவர்களுக்கான ஃபார்ம் கிடைக்காமல் உள்ள தி.மு.க வினருக்கும் இன்னா செய்தாரை வெறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற முறையில் தி.மு.க விற்கும் சேர்த்து ஃபார்ம் நிரப்பி கொடுத்து நேர்மையாக ஜெயிக்கப் போகிறோம்.
எஸ்.ஐ.ஆர் என்பது அரசியலுக்காக பண்ணவில்லை, மக்கள் உரிமைக்காக பண்ணுகிறோம். மக்கள் பிரச்சனை என்றால் குரல் கொடுக்கிற முதல் காட்சி தமிழக வெற்றி கழகமாக தான் இருக்கும்.
பீகாரில் வந்த போது, எஸ்.ஐ.ஆர் தமிழகத்தில் இருந்து வந்த முதல் குரல் தமிழக வெற்றி கழகத்தின் குரல் தான்.
தமிழக வெற்றி கழக தொண்டர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அனைவரிடமும் சொல்ல வேண்டும், நிர்வாகிகளிடம் சொல்ல வேண்டும், இந்த எஸ்.ஐ.ஆர் பட்டியலில் இணைவது, பெயரும் இடம் பெற வேண்டும், அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்
ஒரு மாதத்திற்கு பின்பு இதை நாம் கொடுத்த பின்பு இன்னொன்னு இரண்டாவது விஷயம் வரை வாக்காளர் பட்டியல் வரும். அதை நாம் சரி பார்க்க வேண்டும், போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் நாம் சரி பார்க்க வேண்டும்
போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுகிறார்களா ? என்பதை பார்க்க வேண்டும், அதற்கான புகாரையும் அனுப்ப வேண்டும்.
இந்த கூட்டத்திற்கு இத்தனை பெண்கள் வந்து உள்ளீர்கள் இது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் மிகப்பெரிய ஆதரவு இந்த வெயிலையும், பொருட்படுத்தாமல் இத்தனை பேர் வந்து இருக்கிறீர்கள்.
தி.மு.க கட்சிக்காரர்களை தவிர வேறு யாரும் தி.மு.க விற்கு ஓட்டு போட மாட்டார்கள்.
அனைத்து தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று நமது தலைவர் முதலமைச்சராக பதவி ஏற்று வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் தனது கண்டன உரையில் பேசினார்.
Hindusthan Samachar / V.srini Vasan