Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 16 நவம்பர் (ஹி.ச.)
2025 - கோவை ஆர். எஸ். புரத்தில் உள்ள ராவ் மருத்துவமனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவத்தில் 70 ஆண்டுகளாக தலைசிறந்து விளங்கி வருகிறது.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ராவ் மருத்துவமனை, சார்பில் சூப்பர் கிட்ஸ் 2025 என்ற போட்டியை 6-வது முறையாக நடத்தியது. இதில் நடந்த பல்வேறு போட்டிகளில் குழந்தைகள், அளவற்ற ஆற்றலோடு தனித்துவமிக்க திறமைகளையும், தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தினர்.
இந்த ஆண்டு மாபெரும் சாதனையாக வினாடி வினா போட்டிகளில் 70 அணிகள் பங்கேற்றன. ஓவியப் போட்டிகளில் 240 இளம் ஓவியர்கள் வண்ணங்களை தீட்டி, உற்சாகத்துடன் கற்பனையை வெளிப்படுத்தினர். விதவிதமான. ஆடை அணிவகுப்பு போட்டியில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது ஆடை அழகை வெளிப்படுத்தினர்.
குழந்தைகள் தவழ்ந்து செல்லும் போட்டியில், 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். கூடியிருந்த கூட்டத்தினர் மனதையும், பெற்றோர்களின் மகிழ்ச்சிப்படுத்தியதுடன், நிகழ்ச்சியையும் பரபரப்பாக்கினர்.போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாகவும், தங்களது திறமையை மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடன் தொடர்ந்து வெளிப்படுத்த ரொக்கப் பரிசுகளும், பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன.
குழந்தைகளின் நலனுக்காகவும், அவர்களது வளர்ச்சிக்கு உதவும் நுண்ணூட்ட சத்துக்கள், நலன் பற்றியும் ராவ் மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் கிருஷ்ணசாமி, குழந்தைகள் நூல் ஊட்டச்சத்து மற்றும் பாலூட்டு நல நிபுணர் பேபி ஸ்ரீ ஆகியோர் பெற்றோர்களுக்கு ஆலோசனைகளை, கலந்துரையாடல் வழங்கினர்.
பிரசவ எண்டோஸ்கோபி, கருத்தரித்தல் முதல் நிலை மருத்துவர் மற்றும் இணை இயக்குனர் டாக்டர் தாமோதர் ராவ், நிகழ்ச்சிகளை பாராட்டினார். அவர் பேசுகையில்,
ஒவ்வொரு ஆண்டும் சூப்பர் கிட்ஸ் நிகழ்ச்சி குழந்தைகளின் திறனை வெளிப்படுத்துவதாக அமைகிறது.
அவரது கற்கும் திறன், அவர்களின் வெளிப்பாடு, உற்சாகம் காண்போரை ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது.
மருத்துவ சேவைகளுக்கும் அப்பாற்பட்டு ராவ் மருத்துவமனையின் கடமை, ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியில் பங்கேற்பதாக இருக்கும்.
இந்த ஆறாவது முறையாக நிகழ்ச்சிக்கு கிடைத்துள்ள வரவேற்பு தொடர்ந்து எங்களை கொண்டாட வைக்கிறது.
ஒரு அர்த்தமுள்ள தலமாக இது திகழ்வதோடு, ஆரோக்கியமான குடும்பத்திற்கும் ஆதரவளிப்பதாக இருக்கும் என்றார்.
சூப்பர் கிட்ஸ் ஆறாவது முறையாக, குதூகலமானதாகவும், மருத்துவ விழிப்புணர்வு, புதுமை படைத்தல் கற்பனைத் திறன் கலவையாகவும், சமுதாய தொடர்பு ஏற்படுத்துவதாகவும் இருந்தது.
பெற்றோர்கள், குழந்தைகளுக்கு மட்டுமின்றி, அனைத்து ராவ் மருத்துவமனை குடும்பத்தினருக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.என்றார்.
Hindusthan Samachar / V.srini Vasan