Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.)
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு (டிசம்பர் 3ம் தேதி) சென்னை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப்போட்டி 22ம் தேதி (சனிக்கிழமை) சி.எஸ்.ஐ. காதுகேளாதோருக்கான சிறப்பு பள்ளி, சாந்தோமில் காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெறவுள்ளது.
மாற்றுத்திறன் வகையின் அடிப்படையில் 4 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற உள்ளது.10 வயதிற்கு கீழ்- Crayons and Colour Pencil, 11-18 வயது வரை- வாட்டர் கலர் போன்ற பொருட்கள், 18 வயதிற்கு மேல்- தங்கள் விருப்பப்படி எந்த பொருள் வேண்டுமானாலும் பயன்படுத்தி ஓவியம் வரையலாம்.
மேலும் இப்போட்டியில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் யூடிஐடி கார்டு மற்றும் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டையினை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
பங்கேற்க விருப்பம் உள்ள மாற்றுத்திறனாளிகள் க்யூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து வரும் 19ம் தேதிக்குள் தங்களது பெயரினை பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b