Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.)
தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் எஸ்.ஐ.ஆர் பணியை எதிர்த்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று (16.11.2025) போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதற்காக தவெக மாவட்ட செயலாளர்கள் முறையாக போலீஸ் அனுமதி பெற்றுள்ளனர். மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டனர்.
இதனையடுத்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து விஜய் நேற்று (15.11.2025) வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் 38 மாவட்டங்களிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த விஜய் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் சென்னை சிவானந்த சாலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் இன்று
(நவ 16) காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சுமார் 2500க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எஸ்.ஐ.ஆர்.க்கும், அதில் உள்ள குளறுபடிகளுக்கும் எதிராக பல்வேறு முழுக்கங்களை எழுப்பினர்.
ஓட்டுரிமையை உறுதி செய்ய வேண்டும், ஓட்டுரிமை எங்களுடைய உரிமை என்றும் அவர்கள் முழுக்கங்களை எழுப்பினர்.
Hindusthan Samachar / vidya.b